பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்.
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் கொலை மற்றும் தற்கொலைக்கு நீதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன
ஆர்ப்பாட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா மணப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்கிற தலித் இளைஞரை செங்கல் கால்வாய் தொழிலுக்கு அழைத்து சென்று உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தர்மராஜ் மனைவி சங்கீதாவை மிரட்டி கொலையை
திசைதிருப்பியும்,
கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வரும் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவராஜ் மீது பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் எஸ். சி. எஸ். டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும்.,
தஞ்சாவூர் ஒன்றியம் வடிகால் கிராமத்தை சேர்ந்த கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் பணிபுரியும் திருமதி. வசுந்தரா தேவியின் மகள் சாருமதி தஞ்சாவூர் கிங்ஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் விராளிப்பட்டியைச் சேர்ந்த இரவிச்சந்திரன் மகன் மாணிக்கம் சாருமதியை காதலித்து ஏமாற்றி அவள் தற்கொலைக்கு காரணமான
மாணிக்கத்தின் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில்
எஸ். சி. எஸ். டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி திருவலஞ்சுழி கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ஆனந்த பாபு வரவேற்று பேசினார்.
காவல் துறையைக் கண்டித்து முன்னாள் மண்டல செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன். முன்னாள் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்
இடி முரசு,நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர்
வெற்றி வேந்தன்,மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன், விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் தமிழ் வளவன், வழக்கறிஞர் நெப்போலியன்,டாஸ்மாக் ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை,மாவட்ட தொண்டரடிப்
பொடியாழ்வார் திருமாறன், புறக்கோட்டை குணசேகரன் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் ஒன்றிய செயலாளர்கள். ஜெயக்குமார். பசுபதி வளவன். புர்ஹானுதீன். இனியவன். செந்தில் வளவன். அழக. அம்பிகாபதி. துரை. பிரபு. அரசு. வணங்காமுடி. முருகானந்தம். தென்னவன். வயலூர் பரத், நாகத்தை. வினோத். இளங்கோ. செந்தில் சிலம்பரசன். இ ரமேஷ். ராஜ்குமார். நகர செயலாளர்கள். யோவான். சேக் உசேன். குரு. சுரேஷ். கார்த்திக். மகாமணி
மற்றும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.