தாராபுரம் செய்தியாளர் பிரபு.
9715328420
தாராபுரம்:-நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.
கிராம ஊராட்சிகளை நகராட்சி வார்டு பகுதியாக தரம் உயர்த்தும் தமிழக அரசின் திட்டத்துக்கு கவுண்டச்சிபுதூர் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் 1500 பேர் எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சிபுதூர் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளை தாராபுரம் நகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரண்டு ஊராட்சிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மக்கள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் அப்போது ஊராட்சி பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டையுடன் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியும் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன்பெற முடியாது எனக் கூறிய கிராம மக்கள், தங்கள் ஊராட்சிகளை நகராட்சி உடன் இணைக்கக் கூடாது என கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ஆய்வு செய்து பாதிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் அப்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். கிராமப் பஞ்சாயத்துகளில் நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு நபர் 100 நாள் வேலை பார்த்தால் அந்த குடும்பம்பத்திற்கு சராசரியாக ஆண்டுக்கு சுமார் 25,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். நகராட்சியாக மாற்றப்பட்டால் இத்திட்டம் நிறுத்தப்படும், என்றார்.
“பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம், தோட்டக்கலை மற்றும் வேளான் நலத்துறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் என மத்திய அரசால் கிராம ஊராட்சிகளுக்கு என 42 வகையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. நகராட்சியாக மாற்றப்படும் போது இவை அனைத்தையும் இழக்க நேரிடும்,” என்றார்.
மேலும், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் போது வீட்டு வரி, நில வரி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் இருமடங்காக உயரந்துவிடும். உதாரணமாக கிராம ஊராட்சிகளில் வீட்டு வரியாக சதுர அடிக்கு 55 முதல் 60 பைசா வரை விதிக்கப்படும். ஆனால் நகராட்சியாக மாறும் போது இதே வரி சதுர அடிக்கு ரூபாய் 7.80 பைசாவாக உயரும்.
அதே போல் கிராம ஊராட்சியில் சுமார் 1000 சதுர அடி அளவுள்ள ஒரு வீடு கட்ட, கட்டிட வரை பட அனுமதிக்கு விண்ணப்பித்தால் கட்டணமாக சுமார் 40 முதல் 45-ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் இதே 1000 சதுர அடி அளவுள்ள வீட்டிற்கு நகராட்சியில் வரை பட அனுமதிக்கு சுமார் 2.55 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு தான் கடும் பாதிப்பு.
கிராமப் பஞ்சாயத்துகளை நகராட்சியாக மாற்றும் போது அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதோடு நிர்வாக ரீதியாக அலுவலர்களும் பல பிர்ச்சனைகளை சந்திக்க நேரிடும், எனவே அரசு கிராம பஞ்சாயத்துகளை நகராட்சி வகை மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.