தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பெற்றது.
இதில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா , மற்றும் உதவி ஆய்வாளர்,சமூக நலத்துறை பணியாளர் கபிரியேல்,சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர் செல்வி. ருத்ரா,சமூக பணியாளர் . ஷீலா ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார்கள்.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் 407 குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இதற்கான ஏற்பாடுகளை அன்னை பெண்கள் காப்பக பணியாளர் செல்வி, வின்சி, நிஷா ஆகியோர் செய்திருந்தனர்