திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் கிளை சார்பில் தமிழ்த் தாத்தா உ வே சாவின் 170- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. உத்தமதானபுரத்தில் உள்ள உ வே சா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரணி துவங்கி, உத்தமதானபுரத்தில் உள்ள உ. வே. சா. நினைவு இல்லத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு முன்னாள் கிளை செயலாளரும், ஓய்வு தலைமை ஆசிரியருமான தெய்வ. பாஸ்கரன் தலைமை வகித்தார்.
ஓய்வு டெபுடி பி.டி.ஓ புஷ்பநாதன் பேரணியை துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் சௌந்தர்ராஜன், மாநிலக் குழு கவிஞர் ஆவராணி ஆனந்தன், மாநிலக் குழு உதயகுமார், விஜயகுமார், மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், கிளை தலைவர் கோ. பாலசுந்தரம், கிளைச் செயலாளர் அந்தோணி பாஸ்கர், கிளை பொருளாளர் சின்னத்துரை, மாவட்ட குழு சார்லஸ், துணைத் தலைவர் தனிஸ் லாஸ், குழந்தைகள் நல ஆர்வலர் புவனா, பாடகர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
த.மு. ஏ. க.ச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் “ஊருக்கு உழைத்த உ.வே.சா” என்ற தலைப்பில் இலக்கிய பேருரை ஆற்றினார். இதேபோன்று உத்தம தானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் யோகா ஸ்ரீ, ஜெயஸ்ரீ, நிஷாலினி, நித்யா, விஷ்ணு வர்த்தன், தேவநாதன் ஆகியோர் உ.வே.சா பற்றி பேசினர். உ.வே.சா.வின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை குளோரி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.