கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளயில் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஸ்ரீ ராமானந்தாசுவாமி இவர்களால் நிறுவப்பட்டது இவர் சிறு வயதிலிருந்து காட்டில் வளர்ந்த இவர் தனது 16 வயது இருக்கும் பொழுது ஆஞ்சநேயர் சுவாமி நேரடியாக வந்து பேசத் தொடங்கியது பின்பு அவர் சில வேண்டுதல்களை கூறினார் அன்று தனது 16 வயதில் வேப்பனபள்ளியில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு ராமானந்தாசாமிகள் இந்த கோவில் சிறப்பு அம்சங்கள் கோவில் அருகாமையில் பூமிக்கு அடியில் குழி அமைத்து அதில் 47 நாட்கள் விதம் 7 முறை விரதம் இருந்து மீண்டும் வெளிய வந்து பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வருகிறார். இது மிகவும் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர் என்பதால் கர்நாடகா ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பில்லி, சூனியம், குடும்ப அபிவிருத்தி, திருமண தோஷம், தொழில் அபிவிருத்தி, ஆகியவை நலம் பெற்று வருகின்றனர் இந்த கோவிலில் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வந்து தரிசனம் செய்தனர் தற்பொழுது தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது வாரா வாரம் சனிக்கிழமை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது