ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாத திமுக அரசு தான் கோழைத்தனம் அமைச்சர் சேகர்பாபு க்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே வேட்டமங்கலம் கிராமத்தில் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி தந்தை மறைவுக்கு அவரது இல்லத்திற்கு வந்து ஆறுதல் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்.
திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாமல் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது என நேற்று கும்பகோணத்தில் நடந்த வன்னியர் சங்க சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
இந்த பேச்சுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மத்திய அரசிடம் பாமக வழக்குகிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம் என்றார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு தான் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது. பீகார், தெலுங்கானா, ஜார்கண்ட், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு இந்திய சட்டம் 2008 ன் படி நடத்தி உள்ளனர்.
என்ன அதிகாரம் இல்லை தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும் எனக்கு இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனம்.பாமக வழக்கிற்கும் இதற்க்கும் சம்மந்தம் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையா? தமிழ்நாடு என்ன ஜப்பான், மற்றும் சீனாவில் உள்ளதா ? இந்தியாவில் தான் உள்ளது.
அதிகாரம் இல்லை என்றால் கூட செயலை முடிப்பவர்கள் தான் உண்மையான வீரன்.
அதிகாரம் வைத்து கொண்டு ஜாதிவாரி கணக்கு எடுப்பு நடத்த முடியாது என்று பொய் சொல்வது தான் கோழை தனம் என்றார்.
இதனையடுத்து திமுக அரசு தொடர்ந்து தேர்தலில் வெற்றி அடையும் நிலையில்
திமுக அரசை எதிர்க்கக்கூடிய அரசியல் இயக்கங்களையும் இணைத்து தேர்தலை சந்திக்க பாமக முயற்சி எடுக்குமா எனும் கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.
பேட்டியின் போதுஉழவர் பேரியக்க மாநில தலைவர் கோ. ஆலயமணி, வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் வைத்தி, தங்க அய்யாசாமி, வழக்கறிஞர் பாலு மாநில நிர்வாகி கலியமூர்த்தி, வக்கீல் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.