நத்தம் கோசுகுறிச்சியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சியில் வண்டிப்பாதை புறம்புகளை கற்களை ஊன்றி வேலி அடைத்து ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக்கோரி வந்த புகாரையடுத்து நத்தம் வட்டாட்சியர் பாண்டியராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஊன்றப்பட்டிருந்த கற்களை அகற்றினர். இதில் செந்துறை வருவாய் ஆய்வாளர் தவமணி, சிரங்காட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிராம உதவியாளர் ஜோதி மாகாளி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்..