தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழாவில் அஇஅதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் அஇஅதிமுக நகர கழகம் சார்பில் அம்மாவின் 77-வது பிறந்த நாள் விழா நகரச் செயலாளர் சி. ராஜேந்திரன் தலைமையில்
கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளான இன்று தாராபுரம் அண்ணா சிலை அருகே ரோஜா மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது 500, பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பாலு, ரமேஷ், செல்வகுமார், மற்றும் அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.