அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்வர்
ஜெ.ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடினார்.
கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.கோதண்டபாணி ஆலோசனைப்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா மதுராந்தகம் நகர கழக செயலாளர்
ஜி.ரமேஷ் தலைமையில் பேருந்து நிலைய வளாகத்தில் ஜெயலலிதா திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.ஏழுமலை, கருங்குழி பேரூர் செயலாளர் முருகதாஸ், மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் சூர்யா, மதுராந்தகம் நகர கிளைக் கழக செயலாளர் தோப்புமணி, ஜெய்சங்கர், கண்ணன்,மணி, மற்றும் மகளிர் அணி புனிதா
உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..