கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சிவன் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் பக்தர் கனவில் ஒரு பொருள் தோன்றும். அதனை சிவன்மலை ஆண்டவர் சன்னதி முன்பு பூ கேட்டு உறுதி படுத்துவார்கள். உறுதிப்படுத்திய பின்னரே உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளானது சமுதாயத்தில் ஒருவித தாகத்தை ஏற்படுத்தும் அதன்படி, வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை வளம் சிறந்து, விவசாயம் செழிப்புடன், கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப் பயிர்கள் விளைச்சல் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது.