

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க புதிய தலைவர்,பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் எஸ்.கே.ஆர். சிவசுப்ரமணியன் தலைமை வகித்தார். வர்த்தகர்கள் சங்க தேர்தல் ஆணையர் எஸ்.சுந்தரய்யா, தேர்தல் பொறுப்பாளர்கள் எம்.முத்துகருப்பன், பி.கியான்சந்த், எஸ்.திருநாவுக்கரசு, ஏ.பாஸ்கரன், கே.துரைராஜ், சி.சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் நவநீதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இதில் தலைவராக சுடர்.எஸ்.கல்யாணசுந்தரம், பொதுச்செயலாளராக வி.சுசீந்திரன், பொருளாளராக எச்.எம்.அமீன், இணை பொதுச்செயலாளர் கோ.மார்க்ஸ்பிரியன், துணைத்தலைவர் ஜெ.பாலமுருகன், அமைப்பு செயலாளர் பி.பாலமுருகன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.