திருவொற்றியூர்.
திருவொற்றியூர் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை. சென்னை வடகிழக்கு மாவட்ட மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.செந்தில் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் கண்டன உரையாற்றினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மும் மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க நினைக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்து, கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் கழக நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாஜக அரசை கண்டித்தும் இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை தர வலியுறுத்தியும் கோ பேக் மோடி என்ற கண்டன முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ , மீனவர் அணி துணைத் தலைவர் கே.பி சங்கர், எம் எல் ஏ மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ். கணேசன், பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், வை.ம.அருள்தாசன் மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் திரவியம்எம் வி . குமார். குமரேசன். தமிழ்ச்செல்வன். மதன்.உள்பட பலர் கலந்து கொண்டனர் கண்டனர் முழக்கங்களை இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.