தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் நல பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து தங்களது வாழ்வாதார கோரிக்கைகள் அடங்கிய மக்கள் நலப்பணியாளர்கள் சங்கரன்கோவில் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட துணை தலைவரும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தலைவருமான தர்மராஜ் நேற்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜாவை சந்தித்து மக்கள் நல பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனுவை வ்ழங்கினார்.
அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தேசிய அளவில் மற்ற மாநிலங் களில் 100 நாள் வேலைக்கு ஜி.ஆர்எஸ் என்ற பதவியில் பணியமர்த்தப்பட்டு குறைந்தபட்ச ஊதியம் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வழங்கப்படுவதைப் போன்று, தமிழகத்தில் அதே பணிகளை செய்துவரும் மக்கள் நலப்பணியாளர்களுக்கும் இந்த ஊதிய முறையை நடைமுறைப் படுத்த வேண்டும்.
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பதவியை மாற்றி மக்கள் நலப்பணி யாளர்கள் என்ற பெயரில் பணி ஆணையையும், பணி வரன்முறையையும் அமல்படுத்த வேண்டும். பணி ஆணை என்ற 420ஐ ரத்து செய்து மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரால் மக்கள் நலப்பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் காலமுறை நிர்ணயம் செய்தது போன்று, மீண்டும் சிறப்பு கால முறை ஊதியத்தை நடை முறைப்படுத்த வேண்டும்.
மேலும் மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்ற மக்கள் நலப்பணியாளர்களுக்கு குடும்ப நலநிதியும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலையும் வழங்க வேண்டும் தற்போது வழங்கப்படும் இரட்டை ஊதிய முறையை மாற்றி 100 நாள் வேலை திட்ட நிதியிலேயே ஊராட்சி ஒன்றியம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
2021 தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தி 13 ஆயிரத்து 300 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு தாங்கள் எங்களது கோரிக்கைகளை சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் தமிழக முதலமைச்சரை சந்தித்து எங்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற உதவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட துணை தலைவரும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தலைவருமான தர்மராஜ் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் அந்தோணி ராஜ், அரவிந்த், சுப்பாராஜ் ஜோசப், பாலகிருஷ்ணன், அஜந்தா, மாரியம்மாள், உமா, ருக்மணி, ஆவுடையம்மாள், தங்கரத்தினம், உட்பட பலன் கலந்து கொண்டனர்.