நல்லமநாயக்கன் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்.
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஒன்றியம் நல்லமாநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதற்கான பணிகளை திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல்,கிழக்கு தாசில்தார் மீனாதேவி,மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார்,வருவாய் ஆய்வாளர் சிவராமன்,வி.ஏ.ஓ.அரவிந்த்,புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன்,தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் தலைவர் ராஜ், துணைத் தலைவர் டிட்டோ,பிரான்சி சேவியர்,செயலாளர் மைக்கேல் சகாயராஜ், துணைச் செயலாளர்கள் பிரான்சிஸ் விஜிகுமார்,மரிய அந்தோணி, பொருளாளர் ஆரோக்கிய சேகர், துணைப் பொருளாளர்கள் பேட்ரிக் பாஸ்கரன், யுவன் பிரான்சிஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.