பரமத்திவேலூர்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள
கே.எஸ். மூர்த்திக்கு பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அண்ணா சிலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.எஸ். மூர்த்திக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பரமத்தி வேலூருக்கு வருகை தந்த அவருக்கு பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பரமத்திவேலூரில் உள்ள அண்ணா சிலை, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, தமிழக முதல்வரும் துணை முதல்வரும் என் மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பினை வழங்கியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமெனவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெற உள்ள நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுக வை வெற்றி அடையச் செய்ய வேண்டும், அதற்காக இன்றிலிருந்தே ஒவ்வொருவரும் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ் கபிலமலை ஒன்றிய செயலாளர் சண்முகம் மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏபிஆர் சண்முகம் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட அயலக அணி கண்ணன், பேரூர் கழகச் செயலாளர் பரமத்தி ரமேஷ்பாபு வேலூர் முருகன் போத்தனூர் கருணாநிதி பாண்டமங்கலம் முருகவேல் என்கிற பெருமாள் வெங்கரை ராமலிங்கம் பேரூராட்சி தலைவர்கள் பரமத்தி மணி வேலூர் லட்சுமி முரளி பாண்டமங்கலம் சோமசேகர் அகல்யா சேகர் உட்பட மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொத்தனூர் பேரூர் கழகம் சார்பில் பேரூரர் கழகச் செயலாளர் கருணாநிதி தலைமையில் பொத்தனூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் பரமத்தி பேரூர் கழக செயலாளர் ரமேஷ் பாபு தலைமையில் அழைக்கப்பட்ட வரவேற்பில் பேரூர் கழக நிர்வாகிகளும் பேரூராட்சி தலைவர் மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.