திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72–வது பிறந்த நாள் விழாவை, புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஒரு மாதம் முழுவதும் மாநிலம் முழுக்க ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்று மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக புதுச்சேரி மாநில திமுக சார்பில், இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமை மாநில அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் துவக்கி வைத்தார்.

முகாமில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் இரத்ததானம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எ. சம்பத், எம்.எல்.ஏ., மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், அ. தைரியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், பா. செ. சக்திவேல், ந. தங்கவேலு, பெ. வேலவன், வீ. சண்முகம், எஸ். தர்மராஜன், ஆர். ரவீந்திரன், டி. செந்தில்வேலன், ப. இளம்பரிதி, மு. பிரபாகரன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், க. ராஜாராமன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், சே. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், தொமுச அண்ணா அடைக்கலம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், வர்த்தகர் அணி சு. ரமணன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், பொறியாளர் அணி ஆ. அருண்குமார், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், சுற்றுச்சூழல் அணி த. முகிலன் மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி நிறைவில், காமராஜ் நகர் தொகுதி செயலாளர் ர. சிவக்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *