கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.

பல்லடம் அருகே சின்னக்கரையில் பார்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாநகர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள்…
தனித்திறமைகளை வெளிப்படுத்திய அசத்திய மாணவ மாணவிகள்……
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் கார்த்திக் பங்கேற்பு……

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையில் உள்ள பார்க் கல்லூரி சார்பில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள் 2025 என்ற நிகழ்ச்சி நடைபெற்றுகிறது இந்நிகழ்ச்சியில் திருப்பூர் கோவை சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 40 தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம்களில் ஓவியம் வரைதல் நடனப்போட்டி மற்றும் குறும்பட போட்டிகள் நடைபெற்றன ஏராளமான மாணவ மாணவிகள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். உற்சாகத்தோடு மேடையில் மாணவ மாணவிகள் ஆர் ஏ பி நடனம் பரதநாட்டியம் டிஸ்கோ நடனங்களை ஆடி அசத்தினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான கார்த்தி கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

பேட்டி: இரா. கார்த்தி( திரைப்பட இயக்குனர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *