தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் டி .எஸ். எப் வாலிபால் கிளப் நடத்தும் ஐந்தாம் ஆண்டு வாலிபால் திருவிழா சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மீட்டிங் ஸ்பாட் டர்பில் நடைபெற்ற இந்த வாலிபால் விளையாட்டு திருவிழாவில் தாராபுரம், திருப்பூர்,பொள்ளாச்சி,சேலம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 அணிகள் கலந்து கொண்டு விளையாடின
.அதில் வெற்றி பெற்ற திருப்பூர் வக்கீல் பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையை தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரி நிறுவனர் டாக்டர் ஜெய்லானி வழங்கினார்.
இரண்டாம் பரிசு பெற்ற பொள்ளாச்சி ஜி.எம்.வி.சி அணிக்கு ரூபாய் 7 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற தாராபுரம் டி.எஸ்.எம் அணிக்கு ரூபாய் 5 ஆயிரமும், நான்காம் பரிசு பெற்ற தாராபுரம் டி.எஸ்.எப் அணிக்கு ரூபாய் 3 ஆயிமும் வழங்கப்பட்டது.
போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கோப்பையை டாக்டர் ஜெய்லானி டி.எஸ்.எப் அணியின் வீரர் மோகன்,ஜி.எம்.வி.சி வீரர் கண்ணன் மற்றும் திருப்பூர் வக்கீல் பிரதர்ஸ் அணி வீரர்கள் சதீஷ்,மோகன் ஆகியோருக்கு வழங்கினார்.இதில் தாராபுரம் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்,ஆசிரியர் ரத்தினசாமி,போலீஸ் காளிமுத்து, ,டி.எஸ்.எப் டர்ஃப் மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.