திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் தாராபுரம் -கோவை பைபாஸ் ரோட்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திருச்செந்தூர் முருகன் பியூயல்ஸ் பெட்ரோல் பங்க் நேற்று புதிதாக தொடங்கப்பட்டது.

விழாவுக்கு கோவை மண்டல மேலாளர் பங்கஜ் மீனா தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் கணபதி, விற்பனை அதிகாரி மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பழனிச்சாமி- சந்தியாபிரியா தம்பதியினர் அனைவரையும் வரவேற்றனர்.குண்டடம் ருத்ராவதி பேரூராட்சி துணைத்தலைவர் சின்னமணி என்கிற மோகன்ராஜ் கலந்துகொண்டு பெட்ரோல் பங்கை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ருத்ரகுமார் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

இதில் அதிமுக மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் எஸ். வி. டி. சிவபாலகிருஷ்ணன், திருப்பூர் தொழிலதிபர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.திறப்பு விழாவை முன்னிட்டு ஒருவார காலத்திற்கு டீசல் நிரப்பும் வாகனங்களுக்கு லிட்டருக்கு ரூ.1 சலுகையை பெட்ரோல் பங்க் சார்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் பங்கில் ஆயில் மாற்றி தருவது, ஆன்லைன் பண பரிமாற்றம், வாகனங்களுக்கு இலவச காற்று அடைத்துக் கொள்ளும் வசதி, லாரி மற்றும் கார் பார்க்கிங் வசதி, வாகன ஓட்டுனர்கள் குளிக்கும் வசதி, கழிவறை வசதி, இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என அனைத்து வசதிகளுடன் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பங்க் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *