கரூர் மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு திருவிழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்-ன் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட கழகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகள், 48 மாநகராட்சி வார்டுகள், மூன்று நகராட்சிகளில் 21 இடங்கள், எட்டு பேரூராட்சிகளில் 24 இடங்கள் என மொத்தம் 250 இடங்களில் மாபெரும் விளையாட்டு திருவிழாவானது ஆண்களுக்கான போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், சைக்கிள் மிதவேகம், மியூசிக் சேர், கயிறு இழுத்தல் (7 நபர்), பானை உடைத்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
பெண்களுக்கான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், மியூசிக் சேர், மியூசிக் பால், கயிறு இழுத்தல் (7 நபர்) போட்டிகள் நடைபெற்றன.
மேற்குறிப்பிட்ட விளையாட்டு திருவிழாவில் முதலிடம் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு, மாவட்ட அளவில் சிறப்பு போட்டியில் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத்தொகை ரூ.30 லட்சம் ஆகும். மார்ச் 22 ஆம் தேதி கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.