பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடியில் உள்ள திரு. ஆரூரான் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 400 கோடி ரூபாயை இந்த ஆலையை தற்போது விலைக்கு வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 827 நாளாக ஆருரான் சர்க்கரை ஆலை அருகில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் சர்க்கரை ஆலைக்கு எதிராக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் தங்க. காசிநாதன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் மற்றும் பெண்கள் உட்பட க 50க்கும் மேற்பட்டோர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.