தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காவலா குறிச்சி கிராமம் வெண்ணிலிங்கபுரம் கணபதி காலணியில் அமைந்துள்ள அருந்ததியர் சமுதாயத்திற்குட்பட்ட ஸ்ரீ வடக்கு வாச்செல்வி , மற்றும் காளியம்மன் கோவில் கொடை விழா ஊர் நாட்டாமை மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் தீர்த்த குடம், பால் குடம், அக்கினி சட்டி, முளைப்பாரி ,
சாம பூஜை, அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜை , வாண வேடிக்கை மஞ்சல் நீராட்டு விழா, என பல்வேறு நிகழ்வுகள் நடைப் பெற்றது.
இவ் விழாவில் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன், எம் திவ்யா மணிகண்டன், திருநெல்வேலி பாராளுமன்ற உறப்பினர் ராபார்ட் புரூஸ் ஆகியோர் கோவில் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் தொழில் அதிபர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் முருகேஷ்வரி பாலகுமார், வட்டார தலைவர் ரூபான் தேவதாஸ், மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.