எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே கொடியம்பாளையம் கிராமத்தில் 23 கோடி செலவில் நடைபெறும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் மீனவ கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாதளத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் ஒரு கோடியே 23 லட்சத்தில் 95 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்துவதைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்
சிதம்பரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் பிச்சாவரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் கொடியம்பாளையம் கடற்கரை அமைந்துள்ளது இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது இதை ஆய்வு செய்த அமைச்சர் ராஜேந்திரன் சில மாற்றங்களை தெரிவித்து மீனவர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு இல்லாமல் பணிகளை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி என் ரவி மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பி எம் ஸ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்