தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், மார்ச்- 6. தஞ்சாவூர் கலைஞர் நகரில் வசித்து வந்த குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குரு மாணிக்கம்
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவர்
உடல் உறுப்புகள் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.
அவரின் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமாணிக்கம் கடந்த 3ம் தேதி சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்
காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனை அடுத்து அவரது குடும்பத்தினர்கள் அவரின் ஆசைப்படி மூளைச்சாவு அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் கண்கள் தோல் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்தனர்.
உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது
தஞ்சை கலைஞர் நகரில் உள்ள வீட்டில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டு உள்ள அவரது உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.