இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
ஆண்டிபந்தல் மாரியம்மன் ஆலயத்தில் புதிய கட்டிடத்திற்கான மனை பூஜை
திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான மனை பூஜை இன்று காலை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இக்கட்டிடம் ஆனது சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் கிராம நாட்டாமைகள், தலைவர்கள் ஆலய ஸ்தபதி, ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.