சென்னை மாநகராட்சியின் முதல் மண்டலமான திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஒன்று அரசு நிகழ்ச்சியில் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது இந்த இடத்தில் மாநகராட்சி பணியாளர்கள் பல்வேறு பணிகளுக்காக இந்த இடத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது. சிஎம்டிஏவிடம் அதிகாரி புதிய நவீன சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக இந்த இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

17 கோடி செலவில் தரைதளம் முழுவதும் பார்க்கின் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என மூன்று மாடி கட்டிடமாக கட்டப்படும் இந்த நவீன சமுதாய நலக் கூடத்தில் மின் தூக்கிகள் வைபை கேமராக்கள் என மிக பிரமாண்டமாக கட்டப்பட உள்ளதாகவும் பொதுமக்களுக்கு மிக ஏதுவாக பயன்படுத்தும் வகையில் வெகு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் சிஎம்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இன்று இந்த கட்டிடத்திற்கு பூமி பூஜை போடும் நிகழ்வானது காலை நடைபெற்றது திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் திருவெற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் திமு தனியரசு, மாமன்ற உறுப்பினர் சரண்யா கலைவாணன், உறுப்பினர் பானுமதி மற்றும் சி.எம்.டி. ஏ அதிகாரிகள். செயற்பொறியாளர்,உதவி பொறியாளர் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலர் சி.விஜய் பாபு, செயற்பொறியாளர் பாண்டியன். உதவிபொறியாளர் நக்கீரன். உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *