தமிழக அரசு 2021ல் பதவியேற்றதிலிருந்து மாநிலத்திற்கு என தனி வேளாண்பட்ஜெட் முறையை அறிமுகம் செய்து தாக்கல் செய்து வருகிறது.இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியான முறையாக உள்ளது.இந்த ஆண்டு மார்ச் 15ல்,5 வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது. விவசாயிகளிடம் கருத்துக்களையும் கலந்தாய்வு கூட்டங்கள் வாயிலாக சிறப்பான கருத்துகளை பெற்றுள்ளது.
ஆனால் அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்த பட்ச விலை நிர்ணய முறை இதுவரை அமல் படுத்த பட்டதில்லை.குறிப்பாக கிராம புறங்களில் பயிரிடபடும் தக்காளி,கத்தரி,வெண்டை, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு நிரந்தரமாக குறைந்த பட்ச விலையை நிர்ணயித்தால் சிறப்பே! கிராமங்களில் பல ஊர்களில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் விலை இல்லாததால் பல இடங்களில் விளைந்த தக்காளிகளை தெருக்களில் கொட்டிய சம்பவங்கள் இடம் பெற்றதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது.எனவே இந்த வேளாண்பட்ஜெட்டில் கரும்ப,நெல் மட்டுமின்றி அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்த பட்ச விலை நிர்ணயம் இருக்கு மாறு வேளாண்பட்ஜெட்டை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதே போல் அனைத்து குளங்களையும் தூர்வாற நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யுமாறும்.100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாய வேலைகளுக்கான வேலை தொய்வை தீர்க்குமாறும்,வனவிலங்குகள்விவசாய நிலங்களில் ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்குமாறும் வேளாண் பட்ஜெட் அமைந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவர்.இந்த எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறுமாறு தமிழக வேளாண்பட்ஜெட் அமைய வேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.