பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் பேரறிஞர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் தெற்கு ஒன்றிய பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அன்பழகன் 5 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமையிலும் பேரூர் செயலாளர் கபிலன் முன்னிலையிலும் நடைபெற்றது பேரூர் திமுக அலுவலகத்தில் பேரறிஞர் அன்பழகன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவி.அய்யராசு, துரைமுருகன்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் கருணாகரன், கலியமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி அறிவழகன், நகரத் தலைவர் துரை, நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்