திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில் முறையாக குடிநீர் வழங்கி ஒரு வருட காலம் ஆவதாகவும், இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளதாகவும் மேலும் முறையாக குடிநீர் வழங்க கோரி பலமுறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்தாமல் அதிகாரிகள் முறையீடு செய்துள்ளதாகவும், ஊராட்சி செயலாளரிடம் பெண்கள் கடும் வாக்கவாதத்தில் ஈடுபட்டனர் பதிலளிக்க முடியாமல் தன்னுடைய ஊராட்சி செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் இடம் கூறி தாங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர் வட்டார வளர்ச்சி அலுவலர் மேல் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வராததால் காலி குடங்களுடன் பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மூன்று மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்தனர்.

பேட்டி: திருமதி. சந்தியா குடிநீர் வழங்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *