எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே செம்மங்குடி ஊராட்சியில் கடந்த நான்கு மாத காலமாக 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில் கடந்த நான்கு மாத காலமாக 100 நாள் வேலை திட்ட ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
முன்னதாக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து 100 நாள் ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அவரது உறுதியை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்