புதுச்சேரிமாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநில மக்களுக்காக 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை அறிக்கையை கழகத் தலைவர் திரு. மு. இராமதாஸ் வெளியிட கழகத்தின் சேர்மன் R L வெங்கட்டராமன் பெற்றுக் கொண்டார் .

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதுச்சேரி வெங்கட்டா நகரில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கத்தில், புதுவை மாநில மக்களுக்கு பயன் படும் வகையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கழகத்தின் மாநில தலைவர் மு. இராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் RL வெங்கட்டராமன் முன்னிலையில் நடந்தது.

மாநில செயலாளர்கள் சிவகுமாரன், ரவிகுமார் , இணை செயலர் இளங்கோவன் , துணை செயலாளர் கலியபெருமாள், உதவி செயலாளர் ஆண்டாள், காரை மாவட்ட தலைவர் கணபதி சுப்ரமணியன் , முருகன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், டாக்டர் சுப்ரமணியன், முன்னாள் வார்டு உறுப்பினர் தனஞ்செயன், கோமதி, சுலோச்சனா, கவிதா, சுகுணா, ரகோத்தமன், முருகையன், பார்த்திபன், தொகுதி தலைவர்கள் காலாப்பட்டு குமார், லாஸ்பேட்டை மகேந்திரன் , உப்பளம் செல்வம், ராஜ்பவன் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி மக்களுக்கான மாதிரி ( 2025 – 2026 ) நிதி நிலை அறிக்கையை பற்றி மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கம் கொடுத்து கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு. இராமதாஸ் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட அதனை கழகத்தின் சேர்மன் R L வெங்கட்டராமன் பெற்றுக்கொண்டார்.

கழகத்தின் மாநில நிர்வாகிகள், செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்கள், அணி உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் மாநில துணை செயலாளர் K. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *