திருவொற்றியூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு வணிகர்களுக்கு மாநகராட்சி அபராதம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி முதல் விம்கோ நகர் வரை இருபுறமும் வணிகர்கள் மற்றும் பல்வேறு நபர்களால் சாலைகள் ஆக்கிரமிப்பு விளம்பர போடுகளால் போக்குவரத்து இடைஞ்சல் குறித்து பல புகார்கள் மாநகராட்சிக்கும் காவல்துறைக்கும் பொது மக்களால் வழங்கப்பட்டது புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் விஜய் பாபு தலைமையில் செயற் பொறியாளர்கள் பாபு, நக்கீரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் வியாபாரிகளுக்கு முதலில் எச்சரிக்கையும் அதனை தொடர்ந்து அபராதமும் இறுதியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்
இதுகுறித்து மண்டல அதிகாரி விஜயபாபு பத்திரிகையாளர்களிடம் கூறும் போது மாநகராட்சி சார்பில் முதலில் எச்சரிக்கையும் அதன் பின் அபராதமும் விதித்து இருக்கிறோம் வியாபாரிகள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை ஆனால் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் தங்களது பகுதியை வியாபாரிகள் வைத்துக் கொள்ள வேண்டும்
அதேபோல் நகரை தூய்மையாக வைத்திருக்க அவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் தேவையற்ற குப்பைகள் கட்டிடக் கழிவுகளை சாலையில் கொட்ட வேண்டாம் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தால் அது அகற்றப்படும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகள் தொடரும் என கூறினார் ஒரே நாளில் 63 கடைகளுக்கு குறைந்தபட்ச அபராதம் விதித்துள்ளோம் தொடர்ந்து மாநகராட்சி இதை கண்காணிக்கும் என கூறினார்