காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்தவேலூர் பகுதியில்
பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் பிளக்ஸ் இந்தியா இணைந்து
மாற்று திறனாளி பெண்கள் சுயமாக யாருடைய எதிர்பார்புமின்றி தங்களது வாழ்வாதரத்திற்கு தேவையான பொருளாதரத்தை ஈட்டும் வகையில் மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருந்து பேப்பர் பேனா தயாரிக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் இயக்குனர் மலர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி, மற்றும் பிளக்ஸ் இந்தியா நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாற்று திறனாளி பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான மூலப்பொருட்களை வழங்கினர்.
மாற்று திறனாளி பெண்கள் வீட்டில் இருந்தே மாதந்தோறும் 5000 வரை அவர்கள் சம்பாதிக்க முடியும் என்றும் மாற்று திறனாளிகள் சுயதொழில் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை செய்யும் எனவும்
பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை இயக்குனர் திவ்யா தெரிவித்தார்