சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேரணியை துவக்கிவைத்தார்.

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்த விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்த விழிப்புணர்வு பேரணியை ஆரம்பித்து வைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று மட்டுமல்லாது எப்பொழுதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கி பெண்களை பாதுகாக்க வேண்டும் இது ஒவ்வொரு ஆண்களின் கடமையாகும். அதேபோல பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் சிறார் பாதுகாப்பில் அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி அச்சிடப்பட்ட T – Shirt அணிந்து விழிப்புணர்வு நடைபயிற்சி நடத்த உள்ளனர். இந்த பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் மாவட்ட காவல்துறையால் வழங்கப்பட்ட பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்துகொண்டு பெண்காவலர்கள் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 250 பெண்கள் கலந்துகொண்டு தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி ரோவர் வளைவு சென்று மீண்டும் பாலக்கரை பகுதியில் முடிவடைந்தது.

மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.மதியழகன், பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் திரு.A.ஆரோக்கியராஜ் (பெரம்பலூர் உட்கோட்டம்), திரு.P.ரெத்தினம் (ஆயுதப்படை) தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.R.வெங்கடேசுவரன், நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.K.கிள்ளிவளவன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மகேஷ், காவல் ஆய்வாளர்கள் திருமதி.கயல்விழி (அரும்பாவூர் காவல்நிலையம்), திருமதி.சுப்புலெட்சுமி (அனைத்து மகளிர் காவல் நிலையம் பெரம்பலூர்), திருமதி.இந்திரா (பெரம்பலூர் ஊரக காவல்நிலையம்), திருமதி.குணமதி (அனைத்து மகளிர் காவல் நிலையம் மங்களமேடு) மற்றும் பெண் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், ஊர்காவல் படையினர் என அனைவரும் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *