அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பாக அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வேகநடை (வாக்கத்தான்) பந்தயம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., தலைமை தாங்கி கொடியசைத்து வேகநடை பந்தயத்தை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் .விஜயராகவன் (மதுவிலக்கு அமல் பிரிவு), அரியலூர் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி .லெனின் , காவல் ஆய்வாளர்கள் .சந்திரமோகன் (அரியலூர் நகர காவல் நிலையம்) மற்றும் .கார்த்திகேயன் (அரியலூர் போக்குவரத்து காவல் நிலையம்& பொறுப்பு மாவட்ட ஆயுதப்படை)உடன் இருந்தார்கள்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் பாதுகாப்பு குறித்த உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி பொறித்த டீசர்ட்-னை கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் 300க்கும் மேற்பட்டவர்கள் அணிந்து கொண்டு இவ்வாக்கத்தானில் கலந்து கொண்டனர்.
இவ்வேகநடை பந்தயம் மாவட்ட விளையாட்டு அரங்க முன்பாக தொடங்கி, செந்துறை ரவுண்டானா,கொல்லாபுரம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வரை சென்று மீண்டும் அதே வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பாக முடிவுற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள், காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.