மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வாவிகரையில் அமைந்துள்ள
ஸ்ரீ வாலகுருநாதன், அங்காளஈஸ்வரி நொண்டிகருப்புசாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு களரி எடுப்பு விழா நடைபெற்றது
இந்த விழாவில் சாமிக்கு பல்வேறு வகையான மூலிகைகள் அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து வான வேடிக்கையுடன் சாமி அழைக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பொங்கல் வைத்து சக்தி கிடாய் வெட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது
தொடர்ந்து பாலகுருநாதன் அங்காளஈஸ்வரி சாமிக்கு அண்ணா அபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. வானவேடிக்கையுடன் கனி மாற்றுதல் பல்லயம் பிரித்தல் மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை வண்டிக்கார வகையறாக்கள் செய்திருந்தனர்.