பெண்கள் உடல் நலன் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மழலை குழந்தைகள் செய்த விழிப்புணர்வு யோகாவின் மகாமுத்ராவை தொடர்ந்து இருபது நிமிடம் செய்து உலக சாதனை

பெண்கள் உடல் நலன் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் என்பதை வலியுறுத்தி மூன்று வயது முதலான 53 குழந்தைகள் மற்றும் பத்து பெண்கள் இணைந்து யோகாவின் மகாமுத்ராவை செய்து அசத்தியுள்ளனர் உலக அளவில் யோகா குறித்து விழப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது..

இந்தியாவின் கலையான யோக கலையை வெளிநாட்டினர் பலர் ஆர்வமுடன் கற்று வருகின்றனர் இந்நிலையில் இந்திய பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் நிலையில் பெண்கள் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் என்பதை வலியுறுத்தி கோவையில் மழலை குழந்தைகள் 53 பேர் இணைந்து யோகாவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்..

அதன் படி சரவணம்பட்டி நலம் யோகா மையத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் வில்வம் யோகா சாலையில் யோகா பயிற்சி பெற்று வரும் கிரியேட்டிவ் சாம்ப்ஸ் ப்ரீ ஸ்கூல் குழந்தைகள் 53 பேர் இணைந்து மகாமுத்ராவை தொடர்ந்து 20 நிமிடம் செய்து குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

இதில் நலம் யோகா மையத்தில் பயிற்சி பெறும் பத்து பெண்களும் மழலை குழந்தைகளுடன் இணைந்து பல்வேறு ஆசனங்களை செய்தனர்..

இது குறித்து பள்ளியின் தாளாளர் மாலதி முரளி கிருஷ்ணன்,வில்வம் யோக சாலா நிறுவனர் அகிலாண்டேஸ்வரி,நலம் யோகா மையம் ராஜேஷ் ஆகியோர் கூறுகையில்,3 வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் இதில் கலந்து கொண்டதாகவும்,குழந்தைகள் என்பதால் இதற்கு கடந்த ஆறு மாதமாக பயிற்சி வழங்கியதாகவும்,இந்த சாதனையை செய்வதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருந்ததால் மட்டுமே சாத்தியமானதாக தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *