போதி வித்யாலையா பள்ளியில் உலக மகளீர் தினவிழா இராமநாதபுரம் மாவட்டம்
அச்சுந்தவயல் அருகே செய்யலூரில் உள்ள போதி வித்யாலையா சிபிஎஸ்சி பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு உலக மகளிர் தினத்தை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர். சமுதாயத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர்களின் ஈடுபாடு எல்லா துறைகளிலும் தேவை பற்றி எடுத்துத்துரைக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவியர் சமுதாயத்தில் மகளிரின் முக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் ரங்கோலி, கட்டுரை போட்டி, படம் வரைதல் போட்டி நடத்தப்பட்டது கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது