குடவாசல் அருகே மழுவச்சேரி- அன்னவாசல் பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மனப் பறவை என்ற இடத்தில் சோழ சூடாமணி ஆற்றில் இருந்து பிரிந்து குடவாசல் வழியாக மழுவச்சேரி- அன்னவாசல் செல்லும் பாசன வாய்க்கால் சுமார் 30 அடி அகலம் கொண்டது. இந்த வாய்க்காலானது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சுருங்கிவிட்டது.

தற்போது சுமார் மூன்றிலிருந்து ஆறடி அகலம் மட்டுமே வாய்க்கால் எஞ்சியுள்ளது. இந்த வாய்க்கால் குடவாசல் வி. பி. சிந்தன் பேருந்து நிலையம் அருகே உள்ள சுண்ணாம்பு பாளையம் தெரு, கடைவீதி பகுதிகள் வழியாக குளம் குட்டைகளில் நீர் சென்று பாசன வயல் வெளிக்கு செல்லும் மழவச்சேரி- அன்னவாசல் வடிகால் வாய்க்கால் ஆகும். தற்போது இந்த வாய்க்காலில் பேரூராட்சி உட்பட்ட சில வார்டு பகுதிகள் மற்றும் கடைவீதி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வழியாக சாக்கடை நீர் செல்வதால் சுத்தமாக ஓடிக்கொண்டிருந்த வடிகால் வாய்க்கால் தற்போது சாக்கடையாக மாறிவிட்டது. தற்போது இந்த வாய்க்கால் பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும் வகையில் மிக மோசமான சாக்கடை வாய்க்காலாக தற்போது மாறி உள்ளது.

ஆகவே இந்த கோடை காலத்தை பயன்படுத்தி தலைப்பிலிருந்து தூர்வாரி சாக்கடை நீர் கலக்காத வகையில் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். மேலும் குடவாசல் சிறப்பு பேரூராட்சி வளர்ந்து வரும் பேரூராட்சிகளில் ஒன்றாக உள்ளதால், வரும் காலங்களில் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, குடவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் அமைப்பதை மாற்றி சுத்தரிப்பு மையத்துடன் பாதாள சாக்கடை அமைத்தால் மட்டுமே இப்ப பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும். என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *