வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் 07-03-2025 அன்று 41 வது பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் பள்ளி தாளாளர் டி.சுகுமார் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வடக்கிப்பட்டி வழக்கறிஞர் டி.முத்துக்குமார் தலைமை உரையாற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியை வி.தீபிகா ஆண்டறிக்கை வாசித்தார்.
அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ் சுந்தர வடிவேலு, பெ.ஆ.ச. செயலர் டி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்களும்,கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.