வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ. செல்வம் முன்னிலையில் ஒட்டம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கிளை செயலாளர் தியாகராஜன், அவைத்தலைவர் செல்வராஜ்,கழக உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் தேமுதிக விலிருந்து தங்களை விடுவித்து அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதிமுகவில் சேர்ந்த மாற்று கட்சியினரை ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ. செல்வம், ஒன்றிய கழக பொருளாளர் கலைவாணன், மாவட்ட பிரதிநிதி ஒட்டம்பட்டி தங்கவேல், துறையூர் வெங்கடேஷ் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.