இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் பால ஐயப்பனுக்கு ஏகதின இலட்சார்ச்சனை விழா
திருவாரூர் கீழவீதியில் உள்ள அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் ஆலயத்தில் ஆரூர் பங்குனி ஐயப்ப சேவா சங்கத்தினரால் ஏகதின இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகத்தை தொடர்ந்து வழிபாடுகள் மாலை வரை நடைபெற்று இரவு படி பூஜையும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.