தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவாகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் தி ஏ.கே.கமல்கிஷோர்,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் த மரு.ராணி ஸ்ரீகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தி ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன்திருமலைக்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் சண்முகசுந்தர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகம்மது இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், மார்த்தாண்ட பூபதி , மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேரசிரியர்கள், அரசு அலுவலர்கள்,
மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.