தஞ்சாவூர்,மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களைப்பற்றி தரக்குறைவாக பேசியதை கண்டித்து திமுகவினர் தமிழகம் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்,

பின்னர் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர், நிகழ்ச்சிக்கு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமை தாங்கினார்,

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண்.இராமநாதன் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மணவழகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரமணி சுப்பிரமணியன், மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கலையரசன், கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன், மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் சதாசிவம், மாநகராட்சி உறுப்பினர்கள் ஸ்டெல்லா நேசமணி, லெனின், மாநகரப் பொருளாளர்காளையார் சரவணன், பூதலூர் ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு மாவட்ட பிரதிநிதி உதேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *