SBKமேல்நிலைபள்ளியில் ஆண்டுவிழா விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணியில் செயல்பட்டுவரும் SBK மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா நடைபெற்றது. விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை உதவிக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
மேலும் ஒலிம்பிக் தீபமேற்றினார்.. மேலும்விழாவில் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா எம்.ஏ.எல்.எல்.எம் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்..
மேலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிச் செயலாளர் . மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். தலைமையாசிரியர் ச.சக்திவேல் தலைமையாசிரியை மு.தனபாக்கியம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.