துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன் தலைமையில் உப்பிலியபுரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக எம்பிகளை நாகரீகமற்றவர்கள் என்று அவமரியாதையாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மொழியோடும், கல்வியோடும், உரிமையோடும் விளையாடும் ஒன்றிய அரசை கண்டித்தும் ,தமிழக எம்பிக்களை நாகரீகம் மற்றவர்கள் என்று கூறிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதில் ஒன்றிய கழக செயலாளர் முத்துச்செல்வன், அர.ந.அசோகன்,மாவட்ட கழக துணை செயலாளர் சோபனபுரம் எஸ்.கனகராஜ்,பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன்,வெள்ளையன்முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சிறுநாவலூர் சுப்பிரமணியன்,லதா தனபால்,ராஜா மரியதாஸ், வரதராஜ்,மு.ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜசேகர், ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர், வைரி மணிகண்டன், ஆதிதிராவிடர் நல குழு தலைவர் மணிவண்ணன், தீனா,தனபால், வாசுதேவன் மற்றும் ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்