திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ரேவதி, கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் கிருஷ்ண பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் தேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.