சங்கரா பல்கலைக்கழகம் சார்பில் சங்கரா மாரத்தான் போட்டி 2025-ஏராளமானவர்கள் பங்கேற்பு.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர், காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகம், உடற்கல்வித் துறை சார்பில் சங்கரா மாரத்தான்-2025 (ஆரோக்கியத்திற்காக ஓடுங்கள்) போட்டி நேற்று நடைபெற்றது.
ஆரோக்கியத்தையும் உடல் தகுதியையும் மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட இவ்விழாவில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
10 கி.மீ. ஓட்டப் போட்டி பல்கலை கழகத்தின் தொடங்கியது. இதை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ஸ்ரீநிவாசு மற்றும் இணைவேந்தர் பேராசிரியர் ஆர். வசந்த்குமார் மேத்தா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாரத்தான் பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கி, தாமல் தெரு, பூக்கடை சத்திரம், கிழக்கு ராஜவீதி, இந்திரா காந்தி சாலை, வேலூர் செல்லும் சாலை, மேற்கு ராஜவீதி உள்ளிட்ட காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நிறைவடைந்தது.
வெற்றி பெற்றவர்கள்
முதல் பரிசு: பிரகதீஸ்வரன் – ரூ ₹10,000 ,
இரண்டாம் பரிசு: சுகுமாரன் – ₹5,000
மூன்றாம் பரிசு: லோகநாதன் – ₹3,000
நான்கு சிறப்பு பரிசுகள்: தலா ₹1,000
மூன்று ஊக்க பரிசுகள்: தலா ₹500 என
வழங்கப்பட்டன.
மாரத்தானுக்காக தண்ணீர் வழங்கும் மையங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. துணைவேந்தர் போட்டியில் பங்கேற்றவர்களின் ஆர்வத்துக்கு பாராட்டுகள் தெரிவித்தார், மேலும் இணைவேந்தர் அமைப்பாளர்களின் உழைப்பை பாராட்டி பேசினார்.
இதில்
உடற்கல்வித் துறை உதவி இயக்குநர் டாக்டர் ஏ. குணாளன் , அவரது குழுவும் ஒருங்கிணைத்தனர். சங்கரா மாரத்தான் ஆரோக்கியம், ஒழுக்கம், மற்றும் சமூக ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வருங்காலங்களில் இன்னும் அதிகப் பங்கேற்புடன் நடைபெற்றுஎன தெரிவிக்கப்பட்டது.