காங்கயம், செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் ஒரு மணி நேரம் கனமழை
வங்க கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னை, காரைக்கால் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கயத்திலும் நேற்று காலை முதல் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியதை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு மேல் லேசான சாரல் மழையாக துவங்கியது. பின்னர் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் கடந்த 2 வாரங்களாக வெய்யில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று பெய்த மழையால் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்கள், நீர்நிலைகளில் நீர் தேங்கி நின்றது. மேலும் வெய்யிலுக்கு இடையே ஒரு மணி நேர மழை மற்றும் குளிர்ந்த காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.