புதுச்சேரி அக்கார்ட் ஓட்டலில் நடைபெற்ற தேசிய அளவிலான பசுமை வளாகங்களும் – பசுமை நகரங்களும் செயல்திட்ட அறிக்கையை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு க.கைலாசநாதன் அவர்கள் வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பெற்றுக்கொண்டார்.உடன் தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் ம.தனசேகரன்,புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து,அரசு செயலர் பி.ஜவகர்,அரசு செயலர் ஆர்.கேசவன்,வனத்துறை முதன்மை அரசு அதிகாரி பி.அருள்ராஜன்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மு.நந்திவர்மன்,செயல் இயக்குநர் டாக்டர் கோல்டா எட்வின்,ச.பாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.